பேட்மின்டன் வீரருடன் டாப்ஸி காதலா ?

பேட்மின்டன் வீரருடன் காதலா என்றதற்கு கோபமாக பதில் அளித்தார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்தியில் ரன்னிங் சாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறேன். பஞ்சாப் மாநிலம¢ பக்ரைனில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் ஷூட்டிங் நடந்தது. இன்றளவும் ராஜவம்சத்தினர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். சுமார் 10 நாட்கள் தங்கி இருந்து ஷூட்டிங் நடத்தினோம். மன்னர் குடும்பத்தினர் எங்களுடன் அன்பாக பழகியதுடன் பாரம்பரிய பஞ்சாப் உணவு வகைகளை சமைத்து தினமும் விருந்தளித்தனர். அரண்மனையை முழுவதையும் சுற்றிக்காட்டினார்கள்.

மன்னர் வம்சத்தினராக இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாமல் அன்பாக பழகினார்கள். அதன் ஷூட்டிங முடிந்து தற்போது கங்கா – முனி 3 படத்தில் நடித்து வருகிறேன். டி.வி சீரியல் இயக்குனராக நடிக்கிறேன். படம் முழுவதும் எனது கதாபாத்திரம் சீரியஸாகவே அமைந்திருக்கும். இந்த வேடத்துக்கு லாரன்ஸ் எப்படி என்னை தேர்வு செய்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கிடையில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போவுடன் உங்களுக்கு காதலா என்கிறார்கள்.

பேட்மின்டன் விளையாட்டின்போது போவை நான் சந்த¤த்தேன். அப்போது முதல் நண்பர்களாக இருக்கிறோம். என்னைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் எக்கச்சக்கமாக வந்துவிட்டது. அதுபற்றி கேட்டும் பதில் சொல்லியும் டயர்டு ஆகிவிட்டேன். இனிமேல் சொந்த வாழ்க்கைபற்றி கருத்து தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். போவுடனான நட்பும் எனது சொந்த விஷயம். அதுபற்றி வெளிப்படையாக கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Related

சினிமா 4604976915858483377

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item