மகன் கையில் பச்சை குத்தியதால் கம்பி எண்ணும் பெண்!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8575.html
அமெரிக்காவில் 18 வயதுக்கு குறைவானோர் பச்சை குத்திக் கொள்வது (டாட்டூஸ்) சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த நேப்பியர் என்ற பெண் பத்து வயதே நிரம்பிய காகுவான் என்ற தன் மகனை டாட்டூஸ் பார்லருக்கு அழைத்துச் சென்று பச்சை குத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேப்பியரின் மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டான். இவனின் நினைவாக, தன் இளைய மகனுக்கு பச்சை குத்தியுள்ளார். மூத்த மகனை நினைவு படுத்தும் வகையில் அவன் பெயர், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றபோது அவன் ஜெர்சியில் இருந்த நம்பர் ஆகியவற்றை இளைய மகனின் கையில் பச்சை குத்தச் செய்துள்ளார்.
காகுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் கையில் பச்சை குத்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் நேப்பியர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.