விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சிறீலங்கா புலனாய்வாளர்களால் அடித்து படுகொலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்பட்டு வந்த ராமச்சந்திரன் ரவிச்சந்திரன் வயது 37 என்பவரை மலேசியாவில் வைத்து சிறீலங்கா புலனாய்வாளர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார் என்று தாய்லாந்தில் உள்ள அவரது உறவினர் ஈழதேசம் இணையத்திற்கு சற்று முன் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு சிறீலங்கா புலனாய்வாளர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள இவரது சடலம் மலேசிய பொலிசாரால் மீட்க்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் மலேசியா சென்ற போது மலேசிய,தாய்லாந்து எல்லைப்பகுதியான கச்சாய் என்ற இடத்தில் வைத்து கடந்த 2010.10.14 அன்று கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இக்காலப்பகுதியில் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 28.10.2010 அன்று ரவிச்சந்திரன் மலேசியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார்.இதன் பின்னர் அவரது குடும்பத்தவர்களையும் தாய்லாந்திலுள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவருடைய மகன் 14 வயது தனித்தும்,மகள் 12 வயது தாயுடன் இன்னொரு இடத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து கதறி துடித்த வண்ணமுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த இவரை சிறீலங்கா புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து வந்த நிலையில் அவர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடலை கொழும்புக்கு அனுப்புவதற்க்காக மலேசிய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.அத்துடன் இவர் பயன் படுத்திய உடமைகளை உறவினர்கள் அங்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு மலேசிய காவல்துறையினர் அறிவித்துள்ளதாக மேலும் அவர் ஈழதேசத்திடம் தெரிவித்துள்ளார்.

2009 ஆண்டு யுத்தத்துடன் உயிர் தப்புவதற்காக கொலைவெறி நாடான இலங்கையிலிருந்து தப்பித்து அயல் நாடுகளுக்கு சென்று உயிர் தஞ்சம் கோரும் மக்களையும் இனவாத சிங்கள அரசின் கொடிய கொலைவெறி கரங்கள் இரத்தப்பலி எடுத்து வருகின்றமை எமது அடுத்த கட்டத்தை எமக்கு சுட்டிக்காட்டுகிறது.

அன்பை அன்பால் அடக்க முடியும் வன்முறையை வன்முறையாலேயே  அடக்க முடியும்.இதுவே வரலாறு.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item