ஓமோம் சொல்லியே பிரபாகரனின் அழிவுக்கு காரணமான பரிவாரங்கள்!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_4757.html

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்கள் மீதான புரிதல் கிட்டத்தட்ட பூச்சியமாக இருந்து உள்ளது என அமெரிக்காவின் நோர்வே தூதுவராக இருந்த கிளின்ற் வில்லியம்சன் இற்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி துறை இந்நாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்து இருக்கின்றார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒஸ்லோவில் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்று இருக்கின்றது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து இருவரும் பரஸ்பரம் உரையாடி இருக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்கள் மீதான புரிதல் கிட்டத்தட்ட பூச்சியமாகவே இருந்து உள்ளது, குறிப்பாக புறநிலை சக்திகளால் பாதுகாப்புக் கிடைக்கப் பெறும் என்று வீண் நம்பிக்கை கொண்டிருந்தனர், சர்வதேச சமூகத்தின் தலையீடு அல்லது புலம்பெயர் சமூகத்தின் அழுத்தம் பாதுகாப்புக் கொடுக்கும் என்று தீர்க்கமாக நம்பி இருந்ததால் அழிந்து போனார்கள் என்று சொல்ஹெய்ம் சொல்லி இருக்கின்றார்.
ஓமோம் போடுகின்ற ஆட்களே தலைவரைச் சுற்றி இருந்தமையும் இந்த அதிர்ச்சி ஊட்டுகின்ற அழிவுக்கு இன்னொரு காரணம் என்றும் சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
ஒஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.