ஒருவரை கொலைசெய்து கண்களையும் மூளையையும் தின்ற கொடூர மனிதன் (வீடியோ இணைப்பு)





அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரியினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொடர்புபட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஏஞ்சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது மூளையையும், கண்களையும் உண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் உள்ள சுடுகாடொன்றில் வைத்தே இவற்றை உட்கொண்டுள்ளதாகக் குற்றவாளி தெரிவித்துள்ளார். இக்குற்றவாளி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஸ்மித்தை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென இவர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிட்டதாலேயே நீதிபதி இவ் உத்தரவை வழங்கியுள்ளார்.

இவ்வழக்கு இம்மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு 60 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் இவரை விடுதலை செய்ய நேர்ந்தால் அது சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item