மீண்டும் "அந்தமாதிரி" படத்தில் நடிக்கும் அமலா பால்!

சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருந்தார் அமலாபால். இந்த படத்திற்கு ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக அமைப்பினர் என பல இடங்களில் இருந்தும் சரமாரியான கண்டனங்கள் வந்து குவிந்தன. இந்த படத்திற்குப் பிறகு கொஞ்சகாலம் திரைமறைவு வாழ்க்கையே நடத்தி வந்தார் அமலாபால்.


அதன் பிறகு மைனா படத்தில் அவர் நடித்து இன்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடமும் பிடித்துவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடித்ததிலேயே மிகவும் பிடித்தது சிந்துசமவெளி படம்தான். அந்த படத்தை மீண்டும் யாராவது எடுக்க ஆரம்பித்தால் அதில் நான் நிச்சயம் நடிப்பேன்… என்று சொல்லியிருந்தார் அமலாபால்.

இதைத் தொடர்ந்து அமலாபாலுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். நான் நீ என ஏகப்பட்ட புதுமுக இயக்குநர்கள் ஒரு மாதிரியான கதையுடன் அமலாபாலை சந்திக்க முயன்று வருகிறார்கள். விரைவில் சிந்துசமவெளி பாகம் 2 படத்தில் அமலாபால் தோன்றி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item