இப்போதுதான் மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கிறது!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_7814.html

தமிழ் திரையுலகம் எனக்கு நடிகை அந்தஸ்து தந்தது. தெலுங்கு திரையுலகம் என்னை இன்னும் கொஞ்சம் முன்னெடுத்து சென்றது. கன்னட படத்திலும் நடித்தேன். சில காலமாக நடிக்காமல் விலகி இருந்தேன். இதன் மூலம் சினிமாவை ரொம்பவே மிஸ் செய்தேன். குழப்பமான சூழலில் இருந்து இப்போது மீண்டு வந்திருக்கிறேன்.
இதனால், மீண்டும் தெலுங்கு படம் மூலம் எனது நடிப்பை தொடர்கிறேன். இது, பொழுதுபோக்கு நிறைந்த காதல் கதை. ஐதராபாத் மற்றும் அமெரிக்காவில் இதன் பெரும்பகுதி ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார். பிரபுதேவாவுடனான காதல் நீடிக்கிறதா, இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவிக்காத நயன்தாரா, தென்னிந்திய மொழிகளில் முழுவீச்சில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக கதைகள் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது