ஆட்டிசம் உள்ள பெண்ணுடன் உறவு கொள்ள தடை! இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு!!


உடலுறவு கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கக் கூட முடியாத நிலையில், ஆட்டிசம் குறைபாடுள்ள 29 வயது பெண் உறவு கொள்ள இங்கிலாந்து நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த 29 வயது பெண்ணுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ளது. இந்த குறைபாடுள்ளவர்களுக்கு மூளையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றி நடப்பது தெரியாமல் தனக்கென ஒரு உலகத்தில் வாழ்வார்கள். அத்தகைய பாதிப்புள்ள அந்த பெண் யாருடனும் உடலுறவு கொள்ள தடை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நீதிபதி ஹெட்லி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, அந்த பெண்ணின் ஐக்யூ 64 தான். உறவு வேண்டாம் என்று சொல்லக் கூட அவருக்குத் தெரியாது. அதனால் தான் உடலுறவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணை பாதுகாக்க வேண்டியது அவசியம். அந்த பெண்ணால் எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாததால் தான் நீதிமன்றம் இந்த தீர்ப்பளிக்கிறது.
அந்த பெண் யாருடனும் உறவு வைக்கக் கூடாது. அவருடன் யாராவது உறவு கொண்டால் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத பெண்ணைக் காக்கும் பொருட்டு தான் இந்த தீர்ப்பு அளிக்கப்ட்டுள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item