நடிகை பாவனா மரணம்? நினைவஞ்சலி பிரசுரித்த யாழ்.உதயன் பத்திரிகை!

தென்னிந்தியத் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கும் பாவனாவின் புகைப்படத்துடன் இன்னொரு பெண் இறந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்திலிருந்து தினசரியாக வெளிவரும் உதயன் நாளேட்டில் 31 ஆம் நாள் நினைவஞ்சலி விளம்பரமாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. 

பணம் பாதாளம் வரைப் பாயும் என்பார்கள். இது பாவனா வரை பாய்ந்திருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்த யாழ்.உதயன் பத்திரிகை நிர்வாகம், தற்போது இவ்வாறான வழிமுறைகளையும் கையாண்டு பணம் கொள்ளையடிக்கும் பொறிமுறைகளைக் கையாண்டு வருகின்றது.


அதிலும் என்ன வேடிக்கை என்றால் கொழும்பிலும், யாழ்.மானிப்பாயிலும் பாவனாவுக்கு இரங்கல் திருப்பலிப் பூசை இடம்பெற்றதாம்? ஆகவே இதன் முழுமையானதும் சுவாரஸ்யம் நிறைந்த இரண்டாம் பாகம் விரைவில்...! இதற்காக எமது செய்திப் பிரிவு மேலதிக தகவல்களைத் தற்போது திரட்டிக் கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்துப் பாவனாவுக்கு 22 வயதா? 32 வயதா? தடுமாறும் உதயன்!!

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item