தேவாலயத்தில் 250 நடன கலைஞர்களுடன் விஷாலின் நடனம்

விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக அழகான தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
யுடிவி மோஷன் பிக்சர்ஸ், விஷால் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் நான் சிகப்பு மனிதன்.

இதன் படப்பிடிப்பு கடந்து ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாடலை ஜீ.வி.பிரகாஷ் உருவாகியுள்ளார்.
வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீலம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளார்.

ஏலேலோ மெதப்பு வந்திருச்சி…” என்று துவங்கும் இப்பாடலை ஜீ.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணீர் சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ‘தேவாலயம்’ செட் போடப்பட்டுள்ளது.

இப்பாடலுக்கு ஷோபி நடனம் அமைக்க, 250 நடன கலைஞர்களுடன் விஷால், ஜெகன், சுந்தர் நடனம் ஆடியுள்ளார்கள். பாடலின் மற்றொரு பகுதியை இயற்கை சூழ்ந்த இடத்தில் படமாக்குகிறார்கள்.

இந்தப் படத்தை திரு இயக்கி வருகிறார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனிக்க, விஷாலுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

Related

சினிமா 4242240658430961221

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item