உயிர் பிரியும் தருணத்தில் செல்லப்பிராணியிடமிருந்து விடைபெற்ற இளைஞர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிர் பிரியும் நேரத்தில் தனது செல்லப் பிராணியான நாயிடமிருந்து விடை பெற்ற சோகமான சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.மைக் பெட்ரோசினோ என்ற 21 வயது இளைஞர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருடைய உயிர் பிரியப்போவதாக வைத்தியர்கள் அறிவித்தனர். இதனை அறிந்துகொண்ட மைக், தனது செல்லப்பிராணியை பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து மைக்கின் செல்லப்பிராணியான நாயை இறுதியாக பார்க்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது நாயை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தியதாகவும் அதனை தமது வாழ்க்கையின் சோகம் நிறைந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுவதாகவும் மைக்கின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது செல்லப்பிராணியுடன் விடைபெற்றதையடுத்து மைக்கின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Related

Uncategorized 4787902232258131916

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item