எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: சங்கவி

அமராவதி படத்தில் அஜீத் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சங்கவி. 1993–ல் இப்படம் வந்தது. விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். சங்கவிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் பரவின. இதனை சங்கவி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. இதில் உண்மை இல்லை. எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்துக்கு போய் வந்தது பற்றியும் பலவிதமாக பேசப்படுகிறது. எனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் இருக்கிறது. அதில் முகவரி மாற்றம் செய்வதற்காகவே கமிஷனர் அலுவலகத்துக்கு போனேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related

செய்தி 3786729540137979118

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item