தனுஷை கொலவெறிக்கு மாற்றும் கொலவெறி பாடல்!

25 படங்கள் வரை நடித்து விட்டார் தனுஷ். ஆனால் அந்த படங்களில் நடித்தபோது அவருக்கு கிடைக்காத பெயரையும, புகழையும் 3 படத்தில் அவர் பாடிய ஒய்திஸ் கொலவெறி ஒரே பாடல் அவருக்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் புகழை தேடிக்கொடுத்தது. அதன்காரணமாக அதையடுத்து தான் நடித்த பல படங்களில் பாடல் எழுதி பாடத் தொடங்கினார் தனுஷ்.

ஆனால் அதன்பிறகு அவர் எத்தனை பாடல்கள் பாடினாலும், கொலவெறி பாடலுக்கு இன்னமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அதனால், தனுஷ் எந்த விழாக்களுக்கு சென்றாலும் அந்த பாடலை பாடச்சொல்லித்தான் ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்களாம். ஆனால் ஆரம்பத்தில் ரசிகர்கள் கேட்டதும் உடனே பாடி அவர்களை சந்தோசப்படுத்தி வந்த தனுசுக்கு, பல வருடங்களாகியும் இன்னமும் அந்த பாடலையே கேட்டு அடம்பிடிப்பதால், டென்சனில் கொலவெறிக்கு ஆளாகிறாராம்.

இன்னும் எத்தனை வருசத்துக்குத்தான் இந்த ஒரே பாடலை நான் பாடிக்கொண்டிருப்பது என்று தனது பீலிங்ஸை வெளிப்படுத்தும தனுஷ், இப்படி நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை பாட்டு பாட சொல்வதால், நான் நடிகன் என்பதையே மறந்து விட்டு பாடகர் மனநிலை ஏற்பட்டு விடுகிறது என்பவர், இனிமேல் எந்த மேடைகளிலும் நான் பாடப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்

Related

செய்தி 4275213757021027000

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item