2 ஹீரோயின் கதையோடு வருபவர்களை தூர விரட்டும் ஆண்ட்ரியா!

http://besttamillnews.blogspot.com/2013/12/2.html
ஆயிரத்தில் ஒருவன், பச்சக்கிளி முத்துச்சரம் படங்களில் நடித்தபோது, கதாநாயகி வேடங்களை இலக்காக கொள்ளாமல், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த ஆண்ட்ரியாவுக்கு கமலின், விஸ்வரூபம் படத்தில் நடித்த பின், நடிப்பின் மீதான மோகம் அதிகரித்து விட்டது.அதனால், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் என,யாராவது கதை கூறினால், கொலை வெறியுடன், அவர்களை துரத்தி விடுகிறார். ஒரு ஹீரோயின் மட்டுமே உள்ள கதை என்றால், உடனடியாக, ஓ.கே., சொல்கிறார். ஆனால், மலையாளத்தில், அவர் நடித்துள்ள சில படங்களில், படு கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது. இது குறித்து ஆண்ட்ரியாவைக் கேட்டால், தமிழைப் போல்தான்,மலையாளத்திலும் அளவான கவர்ச்சியில் நடிக்கிறேன். சில காட்சிகளில் கொஞ்சம் தாராளம் காட்டியிருப்பது போல்தெரியும். ஆனால், அது மோசமாக இருக்காது என்கிறார்.