திருமணத்தை தள்ளி போடும் த்ரிஷா!

http://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_4193.html
நடிகை த்ரிஷா. 11 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார் என்ற செய்திகள், கடந்த ஆண்டிலிருந்தே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், த்ரிஷா தரப்பில் இருந்து, இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழ், தெலுங்கில் படங்கள் குறைந்த நேரத்தில், கன்னடத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ள த்ரிஷாவுக்கு, தமிழில், அவர் நடித்து, சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படம், மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாம். அப்படத்தை பார்த்த சில டைரக்டர்கள் த்ரிஷாவிடம், தொடர்ந்து, படவாய்ப்பு கொடுப்பதாக நம்பிக்கை வாக்குறுதி அளித்துள்ளார்களாம். அதனால்,அடுத்தாண்டில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த த்ரிஷா, இன்னும் ஒரு வருடம் கலைச்சேவையை தொடரும் முடிவில் இருக்கிறாராம். -