இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற மகா அதிசயம்…

இவரால் சுயமாக நடக்க முடியும். பிறந்த ஊருக்கு நடந்து செல்வார். ஆனால் இவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. மீண்டும் சடமாகி விடுவார்.  இறந்தவரை உயிருடன் எழுப்ப ஒரு விசித்திரமான சடங்கு நடத்தப்பட்டு மந்திரம் பிரயோகிக்கப்படுகின்றது. இவற்றை மந்திர வைத்தியர் ஒருவர் செய்து கொடுப்பார். 

ரொரஜா இன மக்கள் கூட்டத்தின் மத்தியில் இந்நடைமுறை நின்று நிலவி வருகின்றது. மரணம் நிரந்தரம் அல்ல என்றும் மரணம் ஒரு நாளைக்கு மாத்திரம் உரிய விடயம் அல்ல என்றும் நீண்ட கால படிமுறைகளை கொண்டது என்றும் இம்மக்கள் விசுவாசிக்கின்றனர்.

இவர்களது நம்பிக்கையின்படி மரணத்தின் முதலாவது படிமுறை முடிந்ததும் அடுத்த படிமுறை ஆரம்பம் ஆகின்றது. மரணம் என்கிற நீண்ட கால முன்னெடுப்பு முடிவடைய பல வருடங்கள்கூட எடுக்கலாம் என்கின்றனர்.இறந்தவர் மரணத்தின் பின்னரான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதை பூஜா என்று சொல்கின்றனர். இறந்தவர் மரணத்துக்கு பின்னரான வாழ்க்கையை நல்லபடியாக அடையவே சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இறந்தவர் மிகப் பழைமை வாய்ந்த சடங்கு முறை ஊடாக உயிர் கொள்ளச் செய்யப்படுகின்றார். இவர் எழுந்து நடக்க தொடங்குவார். பிறந்த ஊருக்கு செல்லுவார். இறந்தவரை பிறந்த இடத்தில்தான் புதைக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. ஆயினும் ஒரு மிக முக்கியமான விடயம். எவரேனும் இவருடன் உரையாட முயன்றால் அந்த இடத்திலேயே விழுந்து மீண்டும் சடமாகி விடுவார். எனவே இவருக்கு முன்பாக குடும்ப அங்கத்தவர் ஒருவர் நடந்து செல்வார். இறந்து உயிர் பெற்று இருப்பவருடன் உரையாட முயல வேண்டாம் என்று எச்சரித்துக் கொள்வார்.

Related

Uncategorized 7146837958985203462

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item