மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெனீவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானம்,
அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை வெற்றி கொள்ளச் செய்ய அமெரிக்காவும், தோற்கடிக்க இலங்கையும் நடத்தி வரும் போராட்டம் என்பன இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந் நிலையில் சனல் 4 தனது இரண்டாம் பாகக் காணொளியை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பில் முதலாம் பாகத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பையும் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் உலகறியச் செய்து, இலங்கையை ஒரு இக்கட்டான கட்டத்துக்குக் கொண்டு வந்து விட்டிருந்தது.

இந் நிலையில் இதன் இரண்டாம் பாகமாக தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியாலயத் திரைப்படமாகத் தொகுக்கப்பட்டுச் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டமை குறித்து முக்கியவிடயங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியிருப்பதாகவும் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் அதை சனல்4 உறுதிப்படுத்திவிட்டதாகவும் பல்வேறு ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்தன.சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புதிய காணொளியில் இலங்கை அரசாங்கம் போர் முடிந்தவுடன் வெளியிட்டிருந்த தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த காணொளிப் பதிவுகள் சிலவே இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 Embed " readonly="readonly" style="letter-spacing: 0px; width: 150px; line-height: 14px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 4px; padding-right: 1px; padding-left: 1px; height: 12px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-top-color: rgb(31, 31, 31); border-right-color: rgb(31, 31, 31); border-bottom-color: rgb(31, 31, 31); border-left-color: rgb(31, 31, 31); color: rgb(187, 187, 187); ">