தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டமை குறித்து முக்கியவிடயங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம்சிக்கியிருப்பதாகவும் பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புதிய காணொளியில் இலங்கை அரசாங்கம் போர் முடிந்தவுடன் வெளியிட்டிருந்த தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த காணொளிப் பதிவுகள் சிலவே இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.