ஜனாதிபதி மாளிகை மீது கொழும்பில் புலிகள் நடத்த இருந்த தற்கொலை விமான தாக்குதல்!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8709.html

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை விமானங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வாசஸ்தலம் மீது கொழும்பில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று இலங்கை அரசு அச்சம் கொண்டு இருந்து உள்ளது.
இந்த அச்சத்தை 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவருக்கு நேரடியாகவே வெளிப்படுத்தி இருந்தார் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ.
புலிகளின் மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டு இருந்த நிலையில் அமெரிக்க தூதுவருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று இருந்தது.
மாவீரர் தினத்துக்கு முன்னதாக புலிகள் தற்கொலை விமானத் தாக்குதல் ஒன்றை நடத்த முயல்கின்றனர், இதற்காக புலிகளின் விமானம் ஒன்று நவம்பர் 06 ஆம் திகதி வானத்தில் பறக்க விடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது, புலிகளின் பலத்தை வெளிப்படுத்துவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட உள்ளது, புலிகளின் பலத்தை காட்டுகின்ற வகையில் மாவீரர் தினத்துக்கு முன்னதாக ஏதேனும் ஒரு வெற்றியை அடைய வேண்டும் என்று பிரபாகரன் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார், இரத்மலானை விமான தளம், கட்டுநாயக்க விமான நிலையம், அனுராதபுர விமான தளம், ஜனாதிபதியின் கொழும்பு வாசஸ்தலம் ஆகியன இம்முறை புலிகளின் தற்கொலை விமானத்தின் இலக்குகளாக இருக்கின்றமைக்கு சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கோட்டா விபரித்து இருக்கின்றார்.
இலங்கையின் கிபிர் விமானங்களால் இத்தற்கொலை விமான தாக்குதலை முறியடிப்பது கடினமான காரியம், இரவில் புலி விமானம் தாக்குதல் நடத்துகின்ற பட்சத்தில் அதை எதிர்கொள்கின்ற வலிமை கைவசம் உள்ள கிபிர் விமானங்களிடம் கிடையாது என்றும் சொல்லி இருக்கின்றார்.

