ஆடைகளை உருவி அம்மணமாக்கி அடித்த இராணுவத்தினர் !
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_5605.html
நேற்றைய தினம்(14) சிங்கள தேசம் காதலர் தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடிக்கொண்டு இருக்க, வன்னியில் இரவுவேளை தமிழ் இளைஞர்கள் 7 பேரை இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணியில், வீதியில் சென்றுகொண்டு இருந்த 25 வயதுக்கு உட்பட்ட பல தமிழ் இளைஞர்களைப் பிடித்த இலங்கை இராணுவம், அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அவர்களின் ஆடைகளை உருவி அம்மணமாக்கியுள்ளனர். பின்னரும் அவர்கள் தாக்குதல் நின்றபாடக இல்லை. அருகில் உள்ள ஏரியில் அவர்களைப் போட்டு மீண்டும் தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்கியமைக்கு என்ன காரணம் எனத் தெரிவிக்கப்படவில்லை.நெடுங்கேணியில் உள்ள சில சிங்களவர்கள் கொடுத்த தகவலை அடுத்தே, இராணுவம் தமிழ் இளைஞர்களைப் பிடித்து அடித்து சித்திரவதை செய்ததாகச் சொல்லப்படுகிறது. சுமார் 7 தமிழ் இளைஞர்கள் இவ்வாறு இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மயக்கமடைந்து ஏரியில் விழுந்து கிடந்த இளைஞர்களைப் பொலிசார் வந்து எழுப்பி அவரவர் வீடுகளுக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். விடையம் அறிந்த சில பெற்றோர் அங்கேவந்து தமது பிள்ளைகளை இராணுவத்தினர் ஏன் தாக்கினர் என்று கேட்டுள்ளனர். குறிப்பிட்ட 7 தமிழ் இளைஞர்களும் தமது முகாமைத் தாக்கவந்ததாகவும், அதனால் தான் இராணுவம் அவர்களைத் திருப்பித் தாக்கியதாவும் பொலிசார் கூறியுள்ளனர்.
ஆயுதங்களோ, இல்லை குறைந்த பட்ச்சம் ஒரு பொல்லுக் கூட அவர்கள் கைகளில் இருந்திருக்கவில்லை. அப்படி என்றால் பாரிய ஆயுதங்களுடன் நின்றிருக்கும் இராணுவத்தின் முகாமை அவர்கள் எவ்வாறு தாக்க முற்பட்டிருப்பார்கள் என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக மேலும் மக்கள் தெரிவித்தனர். தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்களவர்கள், தமிழ் இளைஞர்கள் தம்மை தாக்க முற்படுவதாக அவ்வப்போது இராணுவத்திடம் தெரிவித்துவருகின்றனராம்.

