வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

வேற்று கிரகவாசிகளை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைவரின் சந்தேகம் வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தான்.
இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்ல பயன்படுத்தும் தட்டு தென்பட்டதாகவோ செய்திகள் வரும். ஆனால் இதுவரை அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.
மேலும் எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் இராணுவ விமான தளத்தில் மூன்று முறை சந்தித்தனர் எனவும் கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.
ஆனால் குட்டின் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன் மூலம் வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item