பேருந்து தினம் கொண்டாட மாணவர்களை அனுமதிக்கக்கூடாது - உயர்நீதிமன்றம் !
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_3704.html

பேருந்து தினம் கொண்டாட மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பச்சையப்பன் கல்லுரி மாணவர்கள் நடத்திய பேருந்து தின கொண்டாட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் போலீசாரும் பொதுமக்களும் காயம் அடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பேருந்து தினம் கொண்டாட ஏற்கனவே தடை உள்ளது. எனவே பேருந்து தினம் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

