நீரிலும் நிலத்திலும் பிழைத்துக் கொள்ளக் கூடிய வீடுகள் பிரித்தானியாவில் அறிமுகம்!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8090.html

இங்கு வாழ்க்கை எந்த பயமும் இல்லாமல் மிக மிக சந்தோசமாகக் கழியும். நீரிலும் நிலத்திலும் பிழைத்துக் கொள்ளக் கூடிய இந்த வீடு பிரித்தானியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்து.
மழை வெள்ளம், ஆற்றுப் பெருக்கு போன்ற இயற்கை இடர்களில் இருந்தும் கூட இந்த வீடுகள் மனிதர்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
லண்டனின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி தான் குறித்த வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
வெள்ள நிபுணர்கள் தான் குறித்த வீட்டை வடிவமைத்துள்ளார்கள்.
இந்த வீட்டைக் கட்டுவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வருங்காலங்களில் மனிதனுக்கு எந்தவகையிலும் இழப்புக்கள் ஏற்படா வண்ணம் இருக்க இவ்வாறான வீடுகள் உதவும்.



