தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழும் உதடுகள்!!


முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.
உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வாட்ஸ் மின்சாரம்
ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.


முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்.

ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.

அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம்.

இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் ‘யுத்தமே’, முத்தத்தில் ஆரம்பிப்பதுதான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலில் மிக அழகாக சித்தரித்துள்ளதையும் நாம் காண முடியும்.

உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.

அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.

மோகம் தரும் முத்தத்தில் சில வகை…

ப்ரீஸ் கிஸ்.
இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பிரெஞ்ச் கிஸ்.
இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்.

ப்ரூட்டி கிஸ்.

இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

ஹாட் அன்ட் கோல்ட் கிஸ்.

முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

லிக் கிஸ்.

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் நிப்பிள் கிஸ்.
உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.

டாக்கிங் கிஸ்.
இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item