காதலர் தினத்தை ஒட்டி தாய்லாந்தில் இடைவிடாது முத்தம் கொடுக்கும் தம்பதியினர்!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_7204.html

இடைவிடாமல் முத்தம் கொடுக்கும் போட்டி ஒன்று தாய்லாந்து நாட்டின் Pattaya கடற்கரை ஓரத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதிலுள்ள விசேடம் என்னவென்றால் போட்டியில் கலந்து கொள்ளும் தம்பதியினர் போட்டி முடியும் வரை எக்காரணம் கொண்டும் உதட்டை விலக்கக் கூடாது என்பது தான்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவில் Pattaya கடற்கரை உள்ளது.
இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முத்தப்போட்டி நேற்றைய தினம் ஆரம்பித்தது. காதலர் தினமான இன்று வரை தொடர்ந்து இடம்பெறுகின்றது.
ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு, இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை ஸ்ரா' மூலம் தான் உட்கொள்ள வேண்டும்.
பல் துலக்கும் போதும் கூட உதடுகள் விலகக்கூடாது'. அப்படி விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்பது போட்டியின் கடுமையான விதிமுறை.
போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு இடைவேளை' அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை செய்த 31 வயதான Lakkana Tiranarat என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம்.
இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று Lakkana Tiranarat கூறியுள்ளார்.
இந்த கின்னஸ் சாதனை முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டொலர் மதிப்புள்ள வைர மோதிரமும், சொகுசு ஹோட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டொலர் மதிப்புள்ள வவுச்சர்களையும் பரிசாக அறிவித்துள்ளனர்.
எது எவ்வாறெனினும் போட்டியின் முடிவில் ஜோடிகளும் அவர்களின் உதடுகளும் பாதுகாப்பாக இருந்தால் சரி.... அல்லது இது தான் குறித்த ஜோடிகளின் கடைசி முத்தமாகவும் இருக்கலாம்.

இதில் அழுத்தி காணொளி பாருங்கள் !

