இலங்கைப் பணிப்பெண்கள் கட்டாய விபசாரம் நிர்ப்பந்தம் !
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_6906.html
இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் பணிப்பெண்கள், அந்நாட்டு எஜமானார்களினால் விபசாரத்துக்காக ஏலம் விடப்படுகின்றனர் என்று அங்கிருந்து இன்று நாடு திரும்பிய பெண்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதி நிலைக்குள்ளான மேலும் ஒரு தொகுதி பணிப்பெண்கள் நேற்றுக் காலை நாடு திரும்பினர். விமானம் மூலம் சுமார் 70 பணிப்பெண்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு திரும்பிய பணிப்பெண்களில் அதிகமானோர் குவைத் மற்றும் சவூதி அரேபிய நாடுகளில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினால் உறுதியளிக்கப்பட்டவாறு தாம் நடத்தப்படவில்லை என்றும் பணிப்பெண்கள் கவலை தெரிவித்தனர். நாட்டிற்குத் திரும்பியவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

