குழந்தையை முதுகில் சுமந்தபடி மலை ஏறும் பெண்
 
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_3495.html
 இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் மென்னா பிரிட்சர்டு, 26 வயதான இப்பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய 2 வயது பெண் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் மென்னா பிரிட்சர்டு, 26 வயதான இப்பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய 2 வயது பெண் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.இவர் படிப்பு தொடர்பாக அவர் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டி இருந்தது. அதற்காக செங்குத்தான உயரம் கொண்ட மலையில் அவர் தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு ஏறினார். அவராவது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் குழந்தைக்கு அதுவும் அணியவில்லை.


மேலும் இவரது இந்த ஆபத்தான செயலைக் குறித்து பலரும் விமர்சித்துள்ளனர். ஆனால் மென்னா பிரிட்சர்டு இதனை பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. கீழே நிற்கும் பயிற்சியாளர் கயிற்றைப் பிடித்தபடி இருப்பதால், தாங்கள் கீழே விழ வாய்ப்பில்லை என்றும் தன்னை மலை ஏற உற்சாகப்படுத்துவதே, தனது குழந்தைதான் என்றும் அவர் கூறுகிறார்.



 
 
 
 

