கொலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு எடிசன் விருதுகள் வழங்கும் விழா

கொலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு எடிசன் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது.
இதில் சிறந்த நடிகருக்கான ரஜினி விருது, வேலாயுதம் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்தது. ராகவா லாரன்ஸ் இவ்விருதை விஜய்க்கு வழங்கினார்.
சிறந்த நடிகைக்கான விருது மயக்கம் என்ன நாயகி ரிச்சாவிற்கு வழங்கப்பட்டது. வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் விருது கிடைத்தது.
நடிகர்கள் ஜெயம் ரவி, மகத் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பிரேம்ஜிக்கு கிடைத்தது.
கொலிவுட்டின் சிறந்த பாடலாக தனுசின் கொலை வெறி பாடல் தெரிவு செய்யப்பட்டது. தனுசின் மனைவி ஐஸ்வர்யா விருதை பெற்றார்.
இதையடுத்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஹாரீஸ் ஜெயராஜ்க்கும், குணசித்திர நடிகை விருது கோவை சரளாவுக்கும், துணை நடிகருக்கான விருது சரவணனுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த வில்லன் நடிகர் விருதை ஆர்.கே. பெற்றார். பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த பேபி சராவுக்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதை மௌனகுரு இயக்குனர் சாந்தகுமார் பெற்றார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item