புலிகளிடம் இருந்து மஹிந்தரை பாதுகாக்க ஆலோசனை வழங்கிய அமெரிக்கா!!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_2457.html

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதல்களில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தப்புகின்றமைக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா சொல்லிக் கொடுத்து உள்ளது.
2006 ஆம் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கு சென்று இருந்தார்.
இவருக்கு அங்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து அசந்து போனார்.
இந்நிலையில் நாட்டில் சொந்த பாதுகாப்பை வலுப்படுத்த எண்ணினார்.
இதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டத்தில் இருந்து ஆலோசனைகள் பெற முடிவெடுத்தார்.
இச்சூழலில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தொலைபேசி மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்குடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதி மஹிந்தரின் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம்? என்று வினவி இருக்கின்றார்.
தூதுவரும் பொருத்தமான ஆலோசனைகளை கூறி இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.