பெண்களும் தயங்காமல், தடையின்றி செக்ஸ் உறவு கொள்ளலாம்!!


தாம்பத்ய ஈடுபாடு என்பது உடலோடு தொடர்புடையது மட்டுமல்ல அது மனதோடும் தொடர்புடையது. ஆர்வம் இருந்தால் மட்டுமே அக்கறை காட்ட முடியும். அதுவும் பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே மெனோபாஸ் கால கட்டம் தொடங்கிவிடும். இது உடல்ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் மனரீதியாகவும் தாம்பத்யத்தில் இருந்து தள்ளி இருக்கச் சொல்லும்.
மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் கால கட்டத்தில் உள்ள பெண்களும் தயங்காமல், தடையின்றி உறவு கொள்ளலாம் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
சுதந்திர உணர்வு
மெனோபாஸ் காலத்தில் பெண்மைக்குறிய மாதசுழற்சி நின்றுவிடும். எனவே அந்த இடைஞ்சல் கிடையது. எனவேதான் மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என்பது அவர்களின் கருத்து.
சோர்வை விரட்டும்
மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்ட செக்ஸ் அருமருந்தாக பயன்படுகிறது என்பதே உண்மை. புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல்பட, நல்ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் தேவை என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம்.
உறவுக்கு வேட்டு
மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கையே என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்களுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள்.
அதிகமாகும் உற்சாகம்
மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இனி எதற்கு செக்ஸ் என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடுவதால், தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது.
மெனோபாஸ் சமயத்தில் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மனதை உற்சாகமாக்கினால் உறவில் உற்சாகமாக ஈடுபடலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபுணர்களின் ஆலோசனை
மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாமல் போய் விடும். இதனால் பெண்ணுறுப்பில் வறட்சித் தன்மை காணப்படும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவதில் தாமதமோ அல்லது சிரமமோ இருக்கலாம். இதனால் உறவின்போது வலி ஏற்படுவது இயற்கை. ஆனால் இதற்கும் கூட நிவாரணங்கள் உள்ளன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஜெல் அல்லது லூப்திகன்ட்களைப் பயன்படுத்தினால் உறவு எளிதாகும். மேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொண்டு வந்தால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இரண்டாவது இன்னிங்க்ஸ்
ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும். தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம். மெனோபாஸ் வந்த மங்கையர் மனரீதியாக துவண்டுவிடாமல் மகிழ்வுடன் இரண்டாவது இன்னிங்ஸையும் சிறப்பாக தொடருங்கள் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item