சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர், ஓடும் ரயிலில் இருந்து வீசினார்!!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_3818.html

சட்டீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியின சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர், தன்னுடைய முயற்சி பலிக்காத காரணத்தால், அந்த சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து வீசியுள்ளார். இதில், சிறுமி படுகாயமடைந்தாள்.
சட்டீஸ்கர், கோர்பா மாவட்டம் பைஸ்முடா கிராமத்தை சேர்ந்தவர் ராமதார். இவருக்கு 12 வயது மகள் இருக்கிறாள். இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ராம்தயாள் கென்வாட், 45 , இந்த சிறுமியின் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் வாங்கித் தருவதாகக் கூறி, குஸ்முண்டா கிராமத்திற்கு அழைத்து செல்வதாக சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, சாராபுந்தியா ரயில் நிலையத்திலிருந்து சட்டீஸ்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராம் தயாள், சிறுமியுடன் பயணித்துள்ளார்.
கோர்பா ரயில் நிலையத்தை நோக்கி ரயில் சென்று கொண்டிருக்கும்போது, சிறுமியை காலியாக உள்ள ரயில் பெட்டிக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு சிறுமி ஒத்துழைக்க மறுக்கவே, ஓடும் ரயிலில் இருந்து சிறுமியை தூக்கி வீசியுள்ளார். இதில், சிறுமி படுகாயமடைந்தாள்.
பக்கத்து பெட்டிகளில் இருந்த பயணிகள், இதைக் கண்டு உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ராம்தயாள் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை குறிப்பிடுகையில், "இந்த சம்பவம் நடந்த உடன் என் வீட்டுக்கு வந்த ராம் தயாள், என் மகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும், தன்னை காயப்படுத்தி விட்டு, சிறுமி ரயிலில் இருந்து குதித்து விட்டதாகவும் கூறினான்' என்றார். தலைமறைவாக உள்ள ராம் தயாள் மீது ஏற்கனவே திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.