மிருசுவிலில் யாழ்பல்கலைக்கழக மணவன் தலைமையில் கொள்ளை! நால்வர் கைது!!



யாழ் மிருசுவில் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுபேர் கொண்ட குழுவினர் கொள்ளையை முடித்துக்கொண்டு செல்லும்போதுமுச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து அவர்களை கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தும் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவு 9.30 மணியளவில் உசன் வடக்குஇ மிருசுவிலில் உள்ள துரைசிங்கம் உதயதர்சினி எனும் பெண்ணொருவரின் வீட்டினுள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுபேர் கொண்ட குழு ஒன்று நுழைந்தது தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என அறிமுகப்படுத்தியதுடன் பிரதேசத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் மற்றும் படையினரிடம் புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ளோர் தொடர்பான தகவல்களை திரட்டவந்துள்ளதாக கூறி அடையாள அட்டைகள் மற்றும் ஆவனங்களை சோதனையிட ஆரம்பித்து.

சிறிது நேரத்தில் தாம் கொண்டுவந்த பையிலிருந்த கூரிய கத்தியொன்றை எடுத்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த அனைவரையும் கத்திமுனையில் மிரட்டி வைத்திருக்க ஏனையோர் வீட்டிலிருந்த தங்கச் தங்கச்சங்கிலி, மோதிரம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அபகரித்து கொண்டு அபகரித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இவர்கள் ஒடத்தொடங்கியதும் வீட்டுக்காரர்கள் கூக்குரல் கிளப்ப அயலவர்கள் கூடி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரைத் தவிர முச்சக்கர வண்டியையும் அதில் பயணித்த நால்வரையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.


இவர்களில் ஒருவர் யாழ் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவன் எனவும் ஓருவர் காலிப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் எனவும் இவர்களில் மூவர் சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இவர்கள் மீது விசாரணைகள் தொடர்கின்றன
.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item