படப்பிடிப்பில் விபத்து – ரத்தம் சிந்திய அஜீத் !!

படப்பிடிப்பில் விபத்து – ரத்தம் சிந்திய அஜீத் !!
அஜீத் ஆசை ஆசையாக நடித்து வரும் பில்லா -2. ரஜினி நடித்த பில்லா படத்தை மீண்டும் ரீமேக் செய்து நடித்த அஜீத் அப்படத்தின் தாறுமாறான ஹிட்டுக்கு பிறகு மீண்டும் அதே சப்ஜெக்ட்டில் நடிக்க ஆசைப்பட்டார். அதன் விளைவாக உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் படம்தான் பில்லா-2.


இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் இதில் நடிக்க ஒப்புக் கொண்ட நடிகையை திடீரென்று அனுப்பி வைத்துவிட்டார்கள். அவருக்கு பதிலாக பார்வதி ஒமணக்குட்டன் நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது என் கனவுகளில் ஒன்று என்றெல்லாம் கூறி, அஜீத் ரசிகர்களையும் பரவசத்திற்குள்ளாக்கிய இந்த பார்வதிக்கு நேற்றைய தினம் கண்ணீர் தினம். என்னாச்சு?

கடந்த சில தினங்களாக சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவாவில் நடைபெறும் இந்த ஷுட்டிங்கில் அஜீத்துக்கு அடிபட்டு கைகள் கிழிந்து ரத்தம் சொட்டியது. இதை கண்டு யூனிட்டே பதற, ரொம்பவே பதறிப் போனாராம் பார்வதி.

ஐஸ்வாட்டர் பாட்டில் ஒன்றால் எதிரியின் தலையில் அடிப்பது போல காட்சி. அது டம்மி பாட்டில்தான் என்றாலும் வாகாக அடிக்கவில்லை என்றால் கையை கிழிக்கும் அபாயம் இருந்தது. ஜாக்கிரதையாகவே இந்த காட்சியை அணுகிய அஜீத், எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்து கைகளை கிழித்துக் கொண்டார்.

இந்த தகவல் சென்னையிலிருக்கும் தனது குடும்பத்தினருக்கு தெரிய வேண்டாம் என்றாராம் அஜீத். இதோ நாங்க சொல்லிட்டோம்… ‘தங்கச்சி, சீக்கிரமா கோவாவுக்கு போங்க!’

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item