இலியானாவை ஒதுக்கி தள்ளிய டான்ஸ் மாஸ்டர் !

இலியானாவை ஒதுக்கி தள்ளிய டான்ஸ் மாஸ்டர் !ஷங்கர் இயக்கும் ‘நண்பன்Õ படத்தில் நடிக்கிறார் இலியானா. அடிக்கடி கிசுகிசுவில் சிக்குபவர். தெலுங்கில் ஜுனியர் என்டிஆருடன் ‘சக்திÕ படத்தில் நடித்தபோது ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று டோலிவுட்டில் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதிக சம்பளம் கேட்டார் என்பதற்காக அவருடன் அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்தார். தற்போது ‘நண்பன்Õ படத்துக்காக நடனம் அமைக்க வந்த பாலிவுட் நடன இயக்குனர் பரா கானுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.
பாடல் காட்சியை படமாக்க செட்டுக்கு வந்தார் பரா கான். ஆனால் தனக்கு வயிற்றுவலி என்று ஓய்வறையிலேயே இலியானா அமர்ந்துவிட்டாராம். உடனடியாக இலியானாவை டாக்டரிடம் அழைத்து சென்றார் பரா கான். பரிசோதனை செய்த டாக்டர், ‘இலியானா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில் பிரச்னை எதுவும் இல்லைÕ என்று கூறினார். பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பினர். மறுபடியும் ஓய்வு அறைக்கு சென்றவர் வெளியில் வரவில்லை. ஆட்களை அனுப்பி அழைத்தும் ரெஸ்பான்ஸ் இல்லை. உர்ரான பரா, இலியானா இல்லாமலேயே அப்பாடல் காட்சியை வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பெல்லி நடன கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து முடித்துவிட்டார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item