இன்று உலக உணவு தினம்!!



உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனிதனின் அடிப்படை உரிமை. ஒவ்வொருவருக்கும் போதுமான அளவில் தரமான உணவு கிடைக்க வேண்டும்.
வசதி வாய்ப்பற்றவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை.

இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு ´உணவு விலை - நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை´ என்ற மையக் கருத்தோடு உலக உணவு தினம் அக்டோபர் 16ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது.

அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம்.

இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு, முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் ஒவ்வொரு அரசும், அவை அனைவருக்கும் வினியோகிக்கபட வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item