கறுப்பு மரண பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்து சாதனை
http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_4079.html
ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர்.
(யேர்சினியா பெஸ்டிஸ்) Yersinia pestis எனப்படும் பக்டீரியாவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும் இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் சிறிய அளவிலேயே அவ் பக்டீரியாவானது மாற்றமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தற்கால என்டிபயோட்டிக்ஸ் மூலம் இப் பக்டீரியாவை இலகுவாக அழிக்கமுடியுமென என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

