உலக அதிசயத்துக்கே இந்நிலைமையா?
உலக அதிசயத்தில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் தனது இருப்பிடத்தையே தக்க வைத்துக்கொள்ள முடியாத அழிவு நிலை ஏற்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற சீனப்பெருஞ்சுவர் இருக்கும் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலப்பகுதிகள் தோண்டப்படுவதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது.
சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும் போது மனித படைப்பாகப் பூமியில் தெரிவது இந்த சீனப் பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பழங்காலத்து பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதைக் கைப்பற்ற அப்பகுதியில் பலரும், சட்டவிரோதமான முறையில் தோண்டி வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, தட்பவெப்ப நிலை மற்றும் சீன- ஜப்பான் நாடுகளிடையே நடந்த போரில் அதிகளவிலான சுவர்ப் பகுதிகள் சேதமடைந்தன.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹிபிய் மாகாணத்தில் பெருஞ்சுவரின் 80 சதவீத பகுதிகள் இடிந்துவிட்டன. இதற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் பராமரிப்பின்றி விடப்பட்டமையே காரணம் எனத் தெரிகிறது.

