திடிகாக்கா(Titicaca) ஏரியில் அமைந்துள்ள மிதக்கும் தீவுகள்

திடிகாக்கா எனும் ஏரி அமெரிக்கா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின்  எல்லையில் அமைந்துள்ள ஒரு  அதிசயமான ஏரியாகும் . இது கடல் மட்டத்திற்கு மேலாக 3811 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் வணிக ரீதியில் மிக அதிகளவு கடல் பயணம் செய்யக் கூடிய ஒரு ஏரியாகக் காணப்படுகிறது. நீரின் அளவைக் கொண்டு பார்க்கும் போது தென் அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய ஏரியாக விளங்குகிறது.திடிகாக்காவில் காணப்படுகின்ற  சிறப்பான  விடயமாக அங்குள்ள மிதக்கும் தீவுகளைக் குறிப்பிடலாம். இவை அப் பகுதியில் வாழும் யுரோஸ் மக்களால், டொடோரா என  அழைக்கப்படுகின்ற நாணல் அல்லது கோரைப் புற்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட செயற்கையான தீவுகளாகும்.  இது சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற ஒரு பிரதான இடமாகப் பெரு எனும் நாட்டில்  காணப்படுகிறது.

இத் தீவுகள் தன்னிச்சையாக நீரில் மிதந்து செல்லவதில்லை, அவை பெரிய அளவிலான மரங்கள் மூலம் ஏரியின் தரையோடு கட்டப்பட்டுள்ளன.  நாணல் புற்கள் விரைவில் சிதைந்து அல்லது அழுகிப் போவதனால்  குறைந்த பட்சம் இவற்றை வருடத்திற்கு 4 முறையாவது மாற்ற வேண்டி உள்ளது.


யுரோஸ் சமூகத்தவர்கள் உண்மையிலேயே சற்று வித்தியாசமானவர்கள், இவர்கள் நவீன உலகுடன் தொடர்பு கொள்வதை விரும்புவதில்லை. எனவே தங்களுக்கென பிரத்தியேகமான அமைப்புகளையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளனர். இவர்களது மொழியாக  யுரோ-அய்மாரா காணப்படுகிறது.

தீவுகள் அளவுகளில் வேறுபடுகின்றன மேலும் தேவையை அடிப்படையாகக் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன.  இதன் மீது நடக்கும் போது நீர்ப்படுக்கையின் மீது நடப்பது போன்று உணரக்கூடியதாக இருக்கும்.

யுரோ மக்களின் உணவு மற்றும் மருத்துவத் தேவைகள் அதிகளவில் டொடோரா என அழைக்கப்படுகின்ற நாணலைச் சுற்றியே காணப்படுகிறது. நாணலின் வெள்ளையான அடிப் பகுதியானது அயடின் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதே போன்று உடலில் வலி ஏற்படும் பகுதிகளில்  நாணலை வைத்துச் சுற்றும் போது அது வலியை உறிஞ்சி மருத்துவ ரீதியாகப் பயனளிக்கிறது. டொடோரவைப் பயன்படுத்தி கோரைப்புல்  தேநீர் தயாரிக்கின்றனர்.
மிதக்கும் தீவுகள் புனோ என்றழைக்கப்படும் விரிகுடாவினால்  பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இவை 2000 அல்லது அதற்கும் மேற்பட்ட யுரோ மக்களுக்குப் புகலிடமாக இருக்கின்றன. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீன்பிடி மற்றும் நெசவு மூலம் பெற்றுக்கொள்கின்றனர். தற்போது சுற்றுலாத் துறை மூலமும் வருவாயை ஈட்டுகின்றனர். சீகல்ஸ், வாத்து மற்றும் பிளமிங்கோ போன்ற பறவைகளை வேட்டையாடித் தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். இவர்கள் உணவு சமைப்பதற்கு கற்களைப் பயன்படுத்துகின்றனர். நாணல் எரிந்து போகாதிருப்பதற்காக கல்லினால் அடுக்குப் போன்று அமைக்கப்பட்டு அதன் மீது தீ மூட்டப்பட்டு உணவு சமைக்கப்படுகிறது.  எப்போதாவது ஏரியின் நீர் மட்டம் குறையும் போது சிதைந்து போன நாணல் புற்களினால்  உருவாக்கப்பட்ட மண்ணில்  உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிரிடக்கூடியதாக இருக்கும்.


அவர்கள் “கறுப்பு இரத்தம்” உடையவர்களாகக் கூறப்படுகிறது. இதுவே இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளகூடியதாகவும் உள்ளதாகக் கூறுகின்றனர்.

அங்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துக் கை வினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இவர்கள் நாணல் புற்களைப் பயன்படுத்தி விலங்குகளின் முக அமைப்பு போன்றும்  மற்றும் பல்வேறு வடிவங்களிலும்  படகுகளை அமைக்கின்றனர். இவை புகைப்படங்களில் காட்சிப்படுத்தவல்ல  சுவாரசியமான விடயங்களாகும். 


யுரோ இன மக்கள் பெருநிலப்பகுதியிலுள்ள அய்மாரா எனும் பழங்குடியினருடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர், மேலும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட  திருமணங்கள் மூலம் இறுதியாக யுரோ மொழியைக் கைவிட்டு அய்மாரா எனும் மொழியைத் தழுவிக்கொண்டனர். இதனால் சுமார் 500 ஆண்டுகளிற்கு முன்னர் அவர்களின் பூர்வீக மொழி அழிந்துபோனதாகக் கருதப்படுகிறது.


இத் தீவினைப் பேணிப் பாதுகாப்பது சிரமமானதாக உள்ளது. யுரோ இனத்தவர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதால் அவர்களிற்கு நேரம் பற்றாக்குறையாக  காணப்படுகிறது. இதற்காக அவர்கள் கடினமாக உழைக்க  வேண்டியுள்ளது. சுற்றுலாத் துறை வருமான வாய்ப்புக்களை வழங்குகின்ற போதும் அவர்களது பாரம்பரிய வாழ்க்கைக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. 




Related

Uncategorized 5590029633150837784

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item