படப்பிடிப்புக்கு வராமல் பள்ளி தோழிகளுடன் அமெரிக்கா பறந்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகா ஜாலியாக ஊர் சுற்ற அமெரிக்கா சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். தமிழில் அரண்மனை, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதற்கிடையில் சிம்புவுடன் காதல் பிரச்னை தலை தூக்கியது. அவரை காதலிப்பதாக இணைய தளத்தில் தெரிவித்த ஹன்சிகா ஒரு சில மாதங்களிலேயே அவருடனான காதலை முறித்துக்கொண்டார். ஷூட்டிங் டென்ஷன், காதல் பிரச்னைகளால் சோர்வுற்ற ஹன்சிகா திடீரென வெளிநாடு செல்ல முடிவு செய்தார். தன்னுடன் பள்ளியில் படித்த தோழிகள் சிலருடன் இன்றளவும் அவர் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்களையும் அழைத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன் அமெரிக்கா பறந்தார். நியூயார்க் சென்ற அவர் அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அங்கு ஓட்டலில் தங்காமல் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கினார். எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் வருடத்துக்கு ஒருமுறை தனது பள்ளி தோழிகளுடன் பொழுதை கழிப்பது ஹன்சிகாவின் பழக்கம். தற்போது அந்த நட்பு அமெரிக்காவரை அவர்களை அழைத்துச் செல்ல வைத்திருக்கிறது. தோழிகளுடன் ஹாலிவுட் ஸ்டுடியோவை சுற்றிப்பார்ப்பதுடன் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்.

2 வாரங்களுக்கு பிறகு அவர் சென்னை திரும்பியதும் மான் கராத்தே படத்தின் பாடல் காட்சியிலும் தொடர்ந்து தெலுங்கு பட ஷூட்டிங்கிலும் பங்கேற்கிறார். ஆனால் அவர் ஷூட்டிங்கிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அமெரிக்கா பறந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

Related

சினிமா 1207430401678573693

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item