விக்ரமின் உயிர்த்தோழியான கத்ரீனா கைப்!

சேது படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த திரையுலகத்தையே தன் பக்கம் இழுத்தவர் சீயான் விக்ரம். அதைத்தொடர்ந்து அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன் போன்ற படங்கள் அவரை வேறு தளத்துக்கு கொண்டு சென்றன. இதில் காசி படத்தைப்பார்க்க சில தெலுங்கு ஹீரோக்களே சென்னைக்கு வந்து தியேட்டரில் அமர்ந்து விக்ரமின் நடிப்பை கண்டுகளித்த ஆச்சர்யங்களும் உண்டு.

அதேபோல், விக்ரமின் இன்னொரு முக்கியமான படம்தான். பிதாமகன். பாலா இயக்கத்தில் அவர் நடித்த அப்படம் விக்ரமிற்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அதையடுத்து பாலிவுட்டின் கவனத்துக்கு வந்தார் விக்ரம். அங்குள்ள பல நடிகர்-நடிகைகள் அவரது நடிப்பை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். குறிப்பாக சில நடிகைகள் நேரடியாகவே விக்ரமை தொடர்பு கொண்டு அவரது நடிப்பு குறித்து பாராட்டு மழை பொழிந்தனர்.

அப்படி விக்ரமை பாராட்டியவர்களில் கத்ரீனா கைப் குறிப்பிடத்தக்கவர். பிதாமகன் படத்தில் தன்னை நடிப்பால் விக்ரம் வியக்க வைத்த காட்சிகள் பற்றி விவரிக்கத் தொடங்கிய அவர், பின்னர் விக்ரமின் உயிர்த்தோழியாகிப்போனாராம். இப்போதுவரை இருவரும் அடிக்கடி போனில் நட்பை வளர்த்துக்கொண்டு வருகிறார்களாம். இந்த தகவலை சமீபத்தில் சென்னையில் நடந்த தூம்-3 பிரஸ்மீட் நிகழ்ச்சியில் தெரிவித்த கத்ரீனாகைப்புக்கு, ஒரு தமிழ் படத்திலாவது விக்ரமுடன் ஜோடி சேர்ந்து, போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் மனதளவில் உள்ளதாம்

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item