கமலை இயக்க விரும்பும் வெங்கட்பிரபு!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தன்னைத்தானே இயக்கிக்கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளார் கமல். இந்த நிலையிலும், கமலை ஒரு படத்திலேனும் இயக்கி விட வேண்டும் என்று அவருக்கான கதை ஒன்றையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரைத் தொடர்ந்து இப்போது வெங்கட்பிரபுவும் கமலை இயக்கும ஆர்வத்தில் தான் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் சிறு வயதில் இருந்தே கமலின் தீவிரமான ரசிகன். அவர் நடித்த படங்கள் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அப்படி நான் பார்த்ததில் விக்ரம் படம் குறிப்பிடத்தக்கது.
என் மனதில் அதிகம் இடம்பிடித்த படம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்திற்கான கதை ஒன்றையும இப்போது உருவாக்கி விட்டேன். 1986ல் வெளியான அப்படம் அப்போதே ஒரு கோடியில் தயாரானது. ஆனால் 6 கோடி வசூலித்தது.
அதனால், இன்றைய காலகட்டத்திற்கேற்ற பிரமாண்ட பட்ஜெட்டில் விக்ரம்-2வை இயக்குவேன் என்று சொல்லும் வெங்கட்பிரபு, விஸ்வரூபம்-2 பட வேலைகளை கமல் முடிக்கிறபோது அவரை சந்தித்து என்னிடமுள்ள ஒன்லைன் கதையை அவரிடம் சொல்வேன்.
அவர் சம்மதம் சொன்னால், அதை திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்கி விடுவேன் என்று சொல்லும் வெங்கட்பிரபு., ஒருவேளை அதற்கான சாத்தியங்கள் அமையா விடில், மங்காத்தா இரண்டாம் பாகத்தை உடனடியாக ரெடி பண்ணுவேன் என்கிறார்.

Related

சினிமா 2000287069497260790

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item