ஜில்லா டைட்டிலில் மோகன்லாலின் பெயரே முதலில் இடம்பெறுகிறதாம்!

விஜய்யும்-மோகன்லாலும் இணைந்து நடித்துள்ள ஜில்லா படம், விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்திருப்பதால், தமிழ்-மலையாளம் என இரண்டு மொழியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பாடல் மற்றும் சண்டை காட்சிகளை மிகப்பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், படத்தில் விஜய் நாயகன் என்பதால், அவரது பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தாராம் இயக்குனர் நேசன். ஆனால், விஜய் குறுக்கிட்டு, மோகன்லால் சாரின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். காரணம், 35 வருடமாக மலையாள சினிமாவை கலக்கிக்கொண்டிருப்பவர் அவர். ஆனால், நான் 21 ஆண்டுகளாகத்தான் சினிமாவில் இருக்கிறேன் என்றாராம்.

ஆனால், மோகன்லால் விஜய்யின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றாராம். கடைசியில், விஜய் சொன்னது போலவே சீனியாரிட்டியை கருத்தில கொண்டு மோகன்லாலின் பெயர்தான் ஜில்லா படத்தில் முதல் பெயராக இடம்பெறுகிறதாம். விஜய்யே முன்வந்து இதை சொன்னதால் ஜில்லா படக்குழுவே அவரை பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறது.

Related

சினிமா 1587254504859567325

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item