எனது படங்களின் தோல்விக்கு நானேதான் முழு பொறுப்பு:ஜீவா!

எனது படங்களின் தோல்விக்கு நானேதான் பொறுப்பு என்றார் ஜீவா. ஜீவா, த்ரிஷா, வினய் நடிப்பில் வெளியாகிஉள்ளது என்றென்றும் புன்னகை. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ஜீவா. அவர் கூறியது: என்றென்றும் புன்னகை படத்தின் கதையை இயக்குனர் அஹமத் சொன்ன விதமே பிடித்திருந்தது. இது கண்டிப்பாக ஒர்க்அவுட் ஆகும் என நம்பினேன். யூத்களுக்கு பிடிப்பதுபோன்ற காமெடி இதில் இடம்பெற்றிருந¢தது. இந்த படம் எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

அதே சமயம் இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. தோல்வி அடைந்தன. எனது படங்களுக்கு நானேதான் முழு பொறுப்பு. அதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. படம் வெற்றி பெற்றால் அது கூட்டு முயற்சி என்றுதான் சொல்வேன். அடுத்ததாக யான் படத்தில் நடித்து வருகிறேன். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். இது ஆக்ஷன் படம். தொடர்ந்து வெரைட்டியான படங்களை செய்யவே விரும்புகிறேன். இவ்வாறு ஜீவா கூறினார்.

Related

சினிமா 7298320452390001057

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item