மங்கோலியா முதல் சீனா வரை 5,000 கி.மீ., "பாதயாத்திரை'

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த, ராப் லில்வால் என்பவர், மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் இருந்து, 5,000 கி.மீ., பாதயாத்திரையாக, ஹாங்காங்கில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
ராப் லில்வாலும், ஒளிப்பதிவாளர் லியோன் மெக்கரனும், தங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை, "வாக்கிங் ஹோம் பிரம் மங்கோலியா' என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளனர்.

இது குறித்து, ராப் லில்வால் கூறியுள்ளதாவது: என் மனைவி ஹாங்காங்கை சேர்ந்தவர் என்பதால், சீனாவைக் காணும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. கோபி பாலைவனத்தில், தன் பயணத்தை துவக்கியபோது, அங்கு குளிர்காலம் நிலவியது; பயணத்தை துவக்கிய சிறிது நேரத்தில், பனிப்புயல் ஆரம்பமாகிவிட்டது.
இந்தப் பயணத்தில், சீனப் பெருஞ்சுவர், மஞ்சள் ஆறு, சீனாவின் வரலாற்று சிறப்பு மிக்க ஷியான் ஆகியவற்றைக் கண்டது, மறக்க முடியாத அனுபவம். உள்ளூர் மக்களுடன், சீனாவின், "மாண்டரின்' மொழியில் உரையாடியதால், இரவு நேரங்களில் ஏதாவது ஒரு கிராமத்தில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.
கோபி பாலைவனத்தில் உள்ள தொழில் நகரங்களையும், சீனாவின் தொழில் விருத்தி குறித்தும் கண்டறிய முடிந்தது. இந்தப் பயணம், 193 நாட்கள் நடந்தன. ஒரு வாரம் நடந்தால், ஒரு நாள் ஓய்வு எடுத்தோம். எங்களுடன், 25 கிலோ எடையுள்ள பொருட்களை தூக்கிக் கொண்டு, தினமும், 10 முதல் 12 மணி நேரம் நடந்தோம். பயண வழியில், பல நேரங்களில், நூடுல்ஸ் மட்டுமே உணவாக இருந்தது.
இவ்வாறு அந்த புத்தகத்தில், தனது பயண அனுபவங்களை, எழுதியுள்ளனர். இதற்கு முன், இவர், சைபீரியாவில் இருந்து லண்டன் வரையிலான, 50 ஆயிரம் கி.மீ.,யை சைக்கிளில் கடந்துள்ளார். மூன்று ஆண்டுகளான, இந்த சைக்கிள் பயணத்தில், 28 சிறிய மற்றும் பெரிய நாடுகளைக் கடந்துள்ளார். 
புவியியல் ஆசிரியரான ராப், பூகோளத்தை அறிவதற்காக இவ்வாறு பயணம் செய்வதாகக் கூறியுள்ளார். இந்த பயணங்களின் மூலம், குழந்தைகளுக்குத் தேவையான நிதி உதவியும் கிடைத்துள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item