தகவல்களை ஒழுங்கான முறையில் வகைப்படுத்துவதற்கு!!




Microsoft Office word-ல் தகவல்களை முறைப்படுத்தி தருவதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒரு Table-ஆக அமையப் பெற்றால், இன்னும் தெளிவான முறையில் அனைவருக்கும் புரியும்.

பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே Table-ஆக மாற்ற முடியும். இதற்கான எளிய வழிகளை Microsoft Office word கொண்டுள்ளது.

1. முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.

3. அடுத்து Tables group-ல் உள்ள Table ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

4. இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Convert Text To Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

                 நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால்,

1. Table மெனு சென்று, அதில் Convert என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

2. பின்னர் கிடைக்கும் துணை மெனுவில் Text To Table என்பதில் கிளிக் செய்திடவும்.

3. அடுத்து ஓகே கிளிக் செய்திட, பட்டியலில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி  Table அமைக்கப்பட்டு கிடைக்கும்.

பெரும்பாலான நேரங்களில் நாம் எதிர்பார்த்த வகையில், Table-கள் இருக்காது. எனவே சில சிறிய மாற்றங்களை அகலத்தை அதிகப்படுத்துவது, உயரத்தைக் குறைப்பது போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

 இதற்கு Table Menu-ல் கொடுக்கப்பட்டுள்ள Table Template-களைப் பெற்று நமக்குப் பிடித்தமான Table Format-ஐ தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

Table வேண்டாம் என எந்த கணத்தில் முடிவு செய்தாலும், Table Menu சென்று Convert To Text தேர்ந்தெடுக்க Table மீண்டும் Text-ஆக அமைக்கப்படும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item