விக்கிலீக்ஸ்: மஹிந்த - புலிகள் கள்ளத் தொடர்பு வீடியோவாக படம் பிடிப்பு!
http://besttamillnews.blogspot.com/2012/03/blog-post.html
இலங்கைப் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து இருக்கின்றார் என்பது அமெரிக்காவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம் மிகவும் நம்பகரமாக தெரிய வந்து இருக்கின்றது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2007 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.
முன்னணி வர்த்தகரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க புலனாய்வு உத்தியோகத்தர் என்று சந்தேகிக்கப்படுபவருமான எமில் காந்தன் என்பவரை மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார குழுவைச் சேர்ந்து இருந்தவர்களான பசில் ராஜபக்ஸ, பி. பி. ஜயசுந்தர, லலித் வீரதுங்க ஆகியோர் சந்தித்துப் பேசி இருக்கின்றனர்.
இச்சந்திப்புக்களில் ஒன்று ரிலான் அலஸின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்று இருக்கின்றது.
இச்சந்திப்பை மொபைல் ஃபோனில் வீடியோ பிடித்து இருக்கின்றார் ரிலான் அலஸ்.
மஹிந்த அரசுத் தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டமையை தொடர்ந்து இச்சந்திப்புக்கள் தொடர்பாக சத்தியக் கடதாசி ஒன்றை முடித்து மிகவும் பாதுகாப்பாக சட்டத்தரணி ஒருவரிடம் கையளித்து இருக்கின்றார் அலஸ்.
அத்துடன் மேற்சொன்ன வீடியோவின் பிரதி ஒன்றை மிகவும் பத்திரமான முறையில் இரகசிய இடம் ஒன்றில் பாதுகாத்து வருகின்றார்.
மேற்சொன்ன வீடியோவின் சில காட்சிகளை கொழும்பில் உள்ள தூதரகங்களை சேர்ந்த பலரும் பார்த்து இருக்கின்றனர்.