சலூனில் ரகசிய அறைகளில் விபசாரம் : பெண்கள் கைது!

அண்ணா நகரில் உள்ள சலூன் கடையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சின்மயா நகரை சேர்ந்தவர் திரிவேணி (40). இவர் அண்ணாநகர் மேற்கு 13வது மெயின்ரோடு நேரு நகரில் சலூன் கடை திறந்தார்.

இந்த சலூன் திறந்து 3 நாட்கள்தான் ஆகிறது. இங்கு கார்த்திகேயன் (27), குமார் (26), ஆனந்த்(20) ஆகியோர் முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சலூனில் விபசாரம் நடப்பதாக திருமங்கலம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் பிராங்டின் ரூபன் அங்கு சென்று சோதனை செய்தார். சலூன் உள்ளே 3 ரகசிய அறைகள் இருந்தன. அங்கு 3 ஆண்களுடன் பெண்கள் இருந்தனர். அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. 

போலீசார் விசாரித்தபோது, அவர்கள் ஆலப்பாக்கத்தை சேர்ந்த ஜோதி (23), சைதாபேட்டையை சேர்ந்த தேவிகா (21), துரைப்பாக்கத்தை சேர்ந்த நீலாவதி (21) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பினர். 

விபசாரத்துக்கு உடந்தையாக இருந்த திரிவேணி, கார்த்திகேயன், குமார், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item