காதலர் தினத்தில் கள்ளக்காதல்: ஆண் ஒருவர் வெட்டிக்கொலை !
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_14.html
காதலர் தினமான நேற்று கள்ளக் காதல் சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (14) பகல் ஒரு மணியளவில் புத்தளம் - ஆனமடுவ - ஸ்வர்ணபாலியாலம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
45 வயதுடைய ஆண், பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார். இந்த நிலையில் காதலர் தினமான இருவரும் சந்தித்து கொள்ள முயன்ற சம்பவம் பெண்ணினுடைய மைத்துனருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மைத்துனர், தனது மைத்துனியுடன் கள்ளக் காதல் தொடர்பை பேணிய ஆணை வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் கள்ளக் காதலனைக் காப்பாற்ற பெண் முயற்சித்தபோது அவரும் தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

