இராட்சத மாலையைக் கண்டு பீதியடைந்த மகிந்த!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_7898.html

யாழ்.மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தைத் திறந்து வைப்பதற்காக நேற்றைய தினம் அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கு இராட்சத மாலை ஒன்று அணிவிக்கப்பட்டது.
இம் மாலை அவரை வரவேற்பதற்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் இருந்து தூத்துக்குடியூடாக வரவழைக்கப்பட்ட பூக்களாலான மாலைகள் இரண்டின் பெறுமதி 70 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
டக்ளஸ் ஏற்பாட்டில் அவரது ஆதரவில் இயங்கும் பிரபல வர்த்தகரின் கப்பல் சேவையூடாக இந்தப் பூக்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இந்த மாலையை ஜனாதிபதிக்கு அணிவிக்க முற்பட்ட வேளை அதனை மகிந்த பீதியடைந்த நிலையில் தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


