மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சகுனியின் முன்னோட்ட காட்சி
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_73.html
கொலிவுட்டில் கார்த்தி நடித்துள்ள சகுனி திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கொலிவுட்டில் தனது திருமணத்திற்கு பின்பு நாயகன் கார்த்தி, சகுனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சகுனி திரைப்படத்தில் கார்த்தியுடன் ப்ரீனிதா இணைந்து நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நாயகன் சந்தானம், நாசர், மும்தாஜ், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
சகுனி திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர் தயாரிக்க, சங்கர் தயாள் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடத்தியுள்ளார்கள்.
மேலும் ஐரோப்பாவின் போலாந்து நாட்டில் திரைப்படத்திற்கான பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கார்த்தி, அரசியலில் இறங்குகிறார்.
அவருடைய அரசியல் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் இயக்குனர் சகுனியில் கூறியுள்ளார்.




